மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு எதிரொலியாக இருமார்க்கமாக இயங்கும் யஷ்வந்தபுரம்-ஹவுரா ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு,
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு எதிரொலியாக இருமார்க்கமாக இயங்கும் யஷ்வந்தபுரம்-ஹவுரா ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்காளத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இருமார்க்கமாக யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்-02246) வருகிற 28-ந் தேதியும், ஹவுரா-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்-02245) சேவை வருகிற 29-ந் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.