ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சம் நோக்கி விரைகிறது

Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை நோக்கி விரைந்து செல்கிறது. ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்து 661 பேருக்கு தொற்று உறுதியானது.

இதன்மூலம், மொத்தம் சரியாக 13 லட்சத்து 85 ஆயிரத்து 522 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்று 14 லட்சத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் கொரோனா 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 லட்சத்து 66 ஆயிரத்து 368 பேருக்கு பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ந்து தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்கிறது.

மூன்றாம் இடத்தில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ள டெல்லி நீடிக்கிறது.

4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் இடத்தில் ஆந்திரா (88 ஆயிரத்து 671), 6-ம் இடத்தில் உத்தரபிரதேசம் (63 ஆயிரத்து 742), 7-ம் இடத்தில் மேற்கு வங்காளம் (56 ஆயிரத்து 377), 8-ம் இடத்தில் குஜராத் (54 ஆயிரத்து 626), 9-ம் இடத்தில் தெலுங்கானா (52 ஆயிரத்து 466), 10-ம் இடத்தில் ராஜஸ்தான் (35 ஆயிரத்து 298) உள்ளது.

பீகாரில் 36 ஆயிரத்து 604, அசாமில் 31 ஆயிரத்து 86, அரியானாவில் 30 ஆயிரத்து 538, மத்திய பிரதேசத்தில் 26 ஆயிரத்து 926, ஒடிசாவில் 24 ஆயிரத்து 13, கேரளாவில் 18 ஆயிரத்து 98, ஜம்மு காஷ்மீரில் 17 ஆயிரத்து 305, பஞ்சாப்பில் 12 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று உள்ளது.

ஜார்கண்டில் 7,836 பேருக்கும், சத்தீஷ்காரில் 7,087 பேருக்கும், உத்தரகாண்டில் 5,445 பேருக்கும், கோவாவில் 4,686 பேருக்கும், திரிபுராவில் 3,862 பேருக்கும், புதுச்சேரியில் 2,654 பேருக்கும், மணிப்பூரில் 2,176 பேருக்கும், இமாசலபிரதேசத்தில் 2,049 பேருக்கும், நாகலாந்தில் 1,289 பேருக்கும், லடாக்கில் 1,276 பேருக்கும், அருணாசலபிரதேசத்தில் 1,126 பேருக்கும், சண்டிகாரில் 852 பேருக்கும், தத்ராநகர் ஹவேலி, தாமன், தையுவில் 860 பேருக்கும் , மேகாலயாவில் 646 பேருக்கும், சிக்கிமில் 499 பேருக்கும், மிசோரமில் 361 பேருக்கும், அந்தமான் நிகோபாரில் 290 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 705 ஆகும். இதனால் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 257 பேர் பலியாகினர். இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்தது. கர்நாடகத்தில் 72, ஆந்திராவில் 52, மேற்குவங்காளத்தில் 42, உத்தரபிரதேசத்தில் 39, டெல்லியில் 29, குஜராத்தில் 22, பீகாரில் 14, ஜார்கண்டில் 12, ராஜஸ்தானில் 11, ஒடிசாவில் 10 பேர் இறந்தனர்.

பிற மாநிலங்களை பொறுத்தமட்டில், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேரும், மத்தியபிரதேசத்தில் 8 பேரும், அரியானாவில் 7 பேரும், கேரளாவில் 5 பேரும், கோவாவில் 4 பேரும், சத்தீஷ்கார், புதுச்சேரி, உத்தரகாண்ட், நாகலாந்தில் தலா 3 பேரும், அசாம், லடாக்கில் தலா ஒருவரும் இறந்தனர்.

இதுவரை மொத்தம் பலியான 32 ஆயிரத்து 63 பேரில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் 13 ஆயிரத்து 389 பேர் ஆவார்கள். மொத்த பலியில் இரண்டாம் இடம் பிடித்துள்ள டெல்லியில் 3,806 பேர் இறந்துள்ளனர். தமிழகம் 3-ம் இடம் வகிக்கிறது. மற்ற மாநிலங்களில் குஜராத்தில் 2,300, கர்நாடகத்தில் 1,796, உத்தரபிரதேசத்தில் 1,387, மேற்கு வங்காளத்தில் 1,332, ஆந்திராவில் 985, மத்திய பிரதேசத்தில் 799, ராஜஸ்தானில் 613, தெலுங்கானாவில் 455, அரியானாவில் 389, ஜம்மு காஷ்மீரில் 305, பஞ்சாப்பில் 291, பீகாரில் 234, ஒடிசாவில் 130, ஜார்கண்டில் 82, அசாமில் 77, உத்தரகாண்டில் 63, கேரளாவில் 59, சத்தீஷ்காரில் 39, புதுச்சேரியில் 38, கோவாவில் 33, சண்டிகாரில் 13, இமாசலபிரதேசம் மற்றும் திரிபுராவில் தலா 11, மேகாலயாவில் 5, நாகலாந்தில் 4, அருணாசலபிரதேசத்திலும், லடாக்கிலும் தலா 3, தத்ராநகர் ஹவேலி, தாமன், தையுவில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page