கொரோனா தொற்றுநோய்க்கான இறுதி தேதி டிசம்பர் 3; சென்னையில் கொரோனா வெடிப்பு அக்டோபர் மாத முடிவில் முடிவடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி
இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 28 லட்சத்தை எட்டியுள்ளது, நாடு 69,672 தொற்றுநோய்களின் புதிய தினசரி சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், மொத்த குணமானவர்கள் எண்ணிக்கையும் இப்போது கிட்டத்தட்ட 21 லட்சமாக உயர்ந்துள்ளன, இது சுமார் 74 சதவீத மீட்பு வீதத்தைக் குறிக்கிறது. மத்திய அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 6,86,395 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொத்தம் 53,866 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தின் பெரும்பகுதி முழுவதும் இந்தியா உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிக தினசரி உச்சத்தை பதிவு செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்கா (55.3 லட்சம் மொத்த பாதிப்புகள்), பிரேசில் (மொத்தம் 34.6 லட்சம் பாதிப்புகள்) ஆகியவற்றிற்கு பின்னால் இந்தியா தொடர்ந்து உள்ளது.
இருப்பினும், இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரேசில் இரண்டையும் விட குறைவாக உள்ளது மற்றும் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் தான் உள்ளது. இது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளை விட மிகக் குறைவு.
இந்தியாவில் தொற்றுநோயின் வீழ்ச்சியின் தொடக்கத்தை நாம் விரைவில் காணலாம்.டைம்ஸ் நெட்வொர்க் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தரவு நிறுவனமான புரோடிவிட்டி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான டைம்ஸ் ஃபேக்ட்-இந்தியா வெடிப்பு அறிக்கையின் சமீபத்திய கணிப்புகளின்படி, கோவிட் -19 தொற்றுநோய் இரண்டு வாரங்களில் இந்தியாவில் உச்சத்தை எட்ட உள்ளது.தொற்றுநோயின் ‘இறுதி தேதி’ டிசம்பர் 3 ஆம் தேதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கணிப்புகளின்படி, பெரும்பாலும் இந்த சூழ்நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் உச்சத்தில் என்று எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் நாட்டிற்குள் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 780,000 ஆக இருக்கும்.
டைம்ஸ் ஃபேக்ட்-இந்தியா கொரோனா தொற்று அறிக்கையின்படி, இந்தியாவின் மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமான மராட்டியம் செப்டம்பர் 14 ஆம் தேதி 2.23 லட்சம் செயலில் உள்ள பாதிப்புகளுடன் உச்சத்தில் எட்ட உள்ளது.
இதற்கிடையில், கர்நாடகா ஆகஸ்ட் 28 ம் தேதி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மற்றும் ஒடிசா முறையே செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 14 ஆகிய தேதிகளில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் உத்தரபிரதேசம் செப்டம்பர் 1 ஆம் தேதி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில், அனைத்து முக்கிய மாநிலங்களுக்கிடையில், ஒடிசா அதன் உச்சத்தை எட்டும் கடைசி இடமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் டெல்லி ஏற்கனவே மோசமான நிலையில் உள்ளன, முறையே ஜூலை மற்றும் ஜூன் மாதங்களில் உச்சத்தை எட்டியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவும் இந்த மாதத்தில், ஒரு வாரத்திற்கு முன்பு, உச்சத்தை எட்டியுள்ளன என்று அறிக்கையின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மும்பை ஏற்கனவே அதன் உச்சத்தை கடந்துவிட்டது, மேலும் நவம்பர் நடுப்பகுதியில் தொற்றுநோயிலிருந்து விடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஏற்கனவே கொரோனாவின் மோசமான கட்டத்தை கண்டு விட்டது. சென்னையில் கொரோனா வெடிப்பு அக்டோபர் மாத முடிவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் கொரோனா வெடிப்பு நவம்பர் தொடக்கத்தில் டெல்லியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு இதுவரை உச்சத்தை காணவில்லை. ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நவம்பர் நடுப்பகுதியில் வெடிப்பு முடிவுக்கு வரும்.
முக்கிய நகரங்கள் தினசரி கொரோனா பாதிப்புகளின் வீதத்தை குறைப்பதில் நிலைத்தன்மையைக் காண்பிப்பதால், சமீபத்திய வாரங்களில், சிறிய நகரங்களுக்கு கவனம் திரும்பியுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் நாம் நெருங்கும்போது, இந்தியாவின் சமீபத்திய பாதிப்புகளில் கணிசமான பகுதி இப்போது இந்தியாவின் அடுக்கு -2 மற்றும் அடுக்கு -3 நகரங்களான இந்தூர், தானே, சூரத், ஜெய்ப்பூர், நாசிக் மற்றும் திருவனந்தபுரம் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த நகரங்களில் பெரும்பான்மையானவை நவம்பர் இரண்டாவது வாரத்திலோ அல்லது அதற்கு பின்னரோ கொரோனா வெடிப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.