4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.272 உயர்வு

Spread the love

தங்கம் விலை 4 நாட்களுக்கு பிறகு பவுனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது.


சென்னை,

தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை கடந்த 7-ந்தேதிக்கு பிறகு சரிந்தது. இந்த நிலையில் 4 நாட்களுக்கு பின்னர், நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருக்கிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 903-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 224-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.34-ம், பவுனுக்கு ரூ.272-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 937-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 496-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தங்கம் விலை மாற்றம் இருக்கும்போது, வெள்ளி விலையிலும் அதேபோல மாற்றம் இருக்கும். அந்தவகையில் நேற்று வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 90 காசும், கிலோவுக்கு ரூ.1,900-ம் அதிகரித்து, ஒரு கிராம் 71 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.71 ஆயிரத்து 700-க்கும் விற்பனை ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page