கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
அதிபர் தேர்தலையொட்டி நியூ ஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது, கமலா ஹாரிஸ் தேர்தலில் துணை அதிபராக போடியிட தகுதியில்லாதவர் என்றும், என் மகள் இவாங்கா டிரம்ப் தான் சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், ஜமைக்காவைச் சேர்ந்த அப்பாவுக்கும், இந்திய தாய்க்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் கருப்பின பெண் என்றும் டிரம்ப் கூறினார்.