குஜராத் பூங்காவில் திடீரென தோன்றிய மர்ம உலோகத்தூண்..!

Spread the love

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றிய மோனோலித் எனப்படும் மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியது.


அகமதாபாத்,

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய மோனோலித் எனப்படும் மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை பார்த்ததாக தெரிவித்தனர்.

அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும்.

அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த அமைப்பு காணப்பட்டுள்ளது. உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

பூங்காவின் பணிபுரியும் உள்ளூர் தோட்டக்காரரான ஆசாராம், இதுபற்று கூறுகையில், “ நான் மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்குத் திரும்பியபோது, அந்த அமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.” என்று அவர் கூறினார்.

அகமதாபாத்தின் மர்ம உலோகத் தூண் அமைப்பு ஒரு பேசுபொருளாக மாறியது. பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.

எனினும், இந்த உலோகத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது என தெரியவந்ததால், பிற நாட்டில் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் மர்மம் இங்கு நீடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page