சட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
2021 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பணிக் குழு செயலாளர் சி.மகாலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வடசென்னை கிழக்கு மாவட்டத்துக்கு ஆர்.செந்தில்குமார், வடசென்னை மேற்கு மாவட்டத்துக்கு பி.ஜி.ராஜ்மோகன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு ஏ.வீரபத்திரன், மத்திய சென்னை மேற்கு மாவட்டத்துக்கு ஜி.காளிராஜன், தென் சென்னை வடக்கு மாவட்டத்துக்கு ஜி.கே.மகேந்திரன், தென் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு எம்.வி.எஸ்.ராஜேந்திரநாத், சென்னை மேற்கு மாவட்டத்துக்கு சுபமங்களம் டில்லிபாபு, ஆவடி மாநகர் மாவட்டத்துக்கு செ.தினகரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு வக்கீல் வி.டி.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்துக்கு கே.வி.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செல்வ.அன்புராஜ், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு என்.ஜனார்த்தனன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் தே.மு. தி.க. பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமித்துள்ளார்.