மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி தனது ஆதரவாளா்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறாா்.
சென்னை,
மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி தனது ஆதரவாளா்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறாா். தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாா்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று மு.க அழகிரி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஆதரவாளர்களுடனான இன்றைய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.