காஷ்மீர் உத்தம்பூரில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் ரசாயண தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்திய விமானப்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.