கேரளாவில் செல்போன் கடைகள் வாரத்தில் 2 நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
இது குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதித்து மரணம் அடைந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் 18 வயது வரை மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பட்ட படிப்புக்கான செலவை அரசே ஏற்கும். கேரளாவில் பிளஸ்-1 தேர்வுகள் ஓணம் விடுமுறைக்கு பின் நடத்தப்படும்.
கொரோனா ஊரடங்கு தளர்வாக கல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. செல்போன், கணினி விற்பனை கடைகள், கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி கடைகள், காது கருவிகள், கியாஸ் அடுப்பு விற்பனை மையங்கள் வாரத்தில் 2 நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கேரளாவில் நேற்று 24,166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 30,539 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 181 பேர் மரணம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 8,063 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.