அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

Spread the love

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.


வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கு 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண பணிகள், இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பருவ நிலை மாறுபாடு விவகாரம், ஐநாபாதுகாப்பு கவுன்சில் விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கன் கூறுகையில், “ நமது காலத்தில் உள்ள பல்வேறு முக்கிய சவால்களான விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயலாற்றுகின்றன. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page