மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 167 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அதில் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சிவசேனை கட்சி நிர்வாகியும், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சுகாதாரக்குழு உறுப்பினருமான அமே கோல் தகவல் தெரிவித்தார்.
53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் பலர் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2,700 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,203. மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 223. மேலும், 507 பேர் குணமடைந்துள்ளனர்.