சென்னை: ‘முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும், ஐந்து மாநகராட்சிகளில், பெட்ரோல் பங்குகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை மட்டுமே செயல்படும். ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில், நாளை(ஏப்.,26) முதல், முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என, முதல்வர் நேற்று அறிவித்தார். இதற்கான அரசாணை, நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள், அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
இது தவிர, ஊரடங்கு பகுதியில், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள், காலை, 8:00 முதல் பகல், 12:00 மணி வரை இயங்கும். காஸ் ஏஜன்சிஸ், ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு போன்றவை செயல்படும். இது தொடர்பான, போக்குவரத்தும் தொடரும். அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், வழக்கம் போல செயல்படும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.