புதுடில்லி: கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமாகிய நபர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்புள்ளதா என்றால் உண்டு என்று தான் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அது எப்படி என்கிற கேள்வி பலருக்கு எழும். அதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். ஆனால் இது இன்னும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. கொரோனா வைரஸின் உருவ அமைப்பு நமது உடலில் அது எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துமென தீர்மானிக்கிறது.
நமது உடலில் உள்ள கிருமிகளுக்கெதிராக போராடும் செல்களை நமது நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி செய்யும். நோய் உண்டாக்கும் பேதஜன்களோடு நமது உடல் எதிர்ப்பு சக்தி இணைந்து அவற்றை செயலிழக்கச் செய்யும். பொதுவாக வைரஸ்கள் அவற்றின் ஜெனிட்டிக் கட்டுமானத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும். இதனால் பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்துகளைக் காட்டிலும் வைரஸ்களை அழிக்கும் மருந்துகள் வலுவற்றதாக உள்ளன. ரேபிஸ் வைரஸ் மட்டுமே மருந்தின் வீரியத்துக்கு கட்டுப்படும் வகையில் அதிக மாற்றங்கள் ஏற்படாத ஒன்று.
கொரோனா வைரஸ் பலமடங்காக பிரிந்து செயலாற்றுவதில் சிறந்ததாக விளங்குகிறது. ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனால் உயிர் பிழைத்தவர்கள்கூட இந்த SARS-CoV-2 மியூட்டன் வெர்ஷன் எனப்படும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு, காலரா, ஜலதோஷம், சின்னமை ஆகிவற்றை உண்டாக்கும் வைரஸ்கள்கூட இவ்வளவு சீக்கிரம் உருமாற்றம் பெற்றுள்ளன. ஒரு மியூடேஷன் கொண்ட கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது மற்ற உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசுக்கு மருந்துகாக அமைய வாய்ப்பில்லை.
எனவே ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை. அமெரிக்க நேஷன்ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் அறிக்கைப்படி கொரோனா வைரஸ் பல முறை ஒருவரைத் தாக்கும் அபாயம் உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் நாடுகளில் ஒருமுறை கொரோனா பாதித்து வீடு திரும்பியவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதே இதற்கு சாட்சி. பாதுகாப்பு கருதி கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படுகிறதா எனக் கண்காணிக்கப்படுகிறது.