ஊரடங்கு காரணமாக நள்ளிரவே வியாபாரிகள் மார்க்கெட்டில் குவிந்தனர். பெரும்பாலானோர் பெரிய வாகனங்களில் மொத்தமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் நள்ளிரவு கோயம்பேடு மார்க்கெட் பரபரப்பாக காணப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கம்போல் காய்கறி விற்பனை
போரூர்:
சென்னையில் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை (புதன்கிழமை) 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நடைபெற்று வரும் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் மதியம் 1 மணிவரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ கடைகள் வழக்கம் போல் செயல்பட்டது.
பூ மார்க்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் குறைந்ததால் காலை 6 மணிக்கு பின்னர் வியாபாரிகள் கடைகளை அடைத்து சென்றுவிட்டனர். காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் 80 சதவீதம் வழக்கம் போல செயல்பட்டன. சில்லரை விற்பனை கடைகள் மிகவும் குறைந்த அளவே திறக்கப்பட்டு இருந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று வெங்காயம் 40 லாரிகள், தக்காளி 25 லாரிகள் என மொத்தம் 180 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கத்தை விட குறைந்த லாரிகளில் மட்டுமே காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி இருந்தனர்.
ஊரடங்கு காரணமாக நள்ளிரவே வியாபாரிகள் மார்க்கெட்டில் குவிந்தனர். பெரும்பாலானோர் பெரிய வாகனங்களில் மொத்தமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் நள்ளிரவு கோயம்பேடு மார்க்கெட் பரபரப்பாக காணப்பட்டது. காலை 6 மணிக்கு பின்னர் வியாபாரிகள் வருகை இல்லை. மேலும் மார்க்கெட்டில் தக்காளி முழுவதும் விற்று திர்ந்து விட்டது. நேற்று ஒரு பெட்டி ரூ.100க்கு விற்ற தக்காளி இன்று ரூ. 200க்கு விற்க்கப்பட்டது, மார்க்கெட்டில் ஏந்த கடையிலும்மே தக்காளி இல்லை.