தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 960 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து சுமார் ஆயிரம் பேர் மீட்பு – நம்பிக்கை தரும் தமிழகம்
சென்னை:
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 24 ஆயிரத்து 942 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களில் 5 ஆயிரத்து 210 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பு படம்
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும், சதவிகிதத்திலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த 5 ஆயிரத்து 210 பேரில் தமிழ்நாட்டில் மட்டும் 960 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழக மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இந்த எண்ணிக்கை சாத்தியமாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமி்ழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த விவரங்கள்:-
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை – 1,865 பேர்
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் – 1,821 பேர்
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் – 825 பேர்
வைரசில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் – 960 பேர்
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் – 23 பேர்