சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மைக்காக களப்பணிக் குழுக்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா பரவலை முன்னிட்டு மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 12 ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நியமிக்கலாம் என்று அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் இந்த மாவட்டங்களில் களப்பணிக் குழுவை நியமித்து அரசு உத்தரவிடுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வது, அங்கு தேவையான சேவைகளை ஆற்றுவது, தொற்றுள்ள நபர்களை தேடுவது மற்றும் பரிசோதிப்பது உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு செய்யும். இந்த குழுக்களுக்கு தேவையான அறிவுரைகளை கலெக்டர் வழங்கலாம்.
சென்னை மாநகராட்சி தலைமையகத்திற்கான களப்பணிக் குழுவில், நிதித்துறை இணைச் செயலாளர் எம்.அரவிந்த், துணைச் செயலாளர் கிருஷ்ணணுன்னி, போலீஸ் இணை கமிஷனர் பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.சி.ஆர்.பி.) சங்கரநாராயணன், பொது சுகாதார முன்னாள் துணை இயக்குனர் ராஜசேகர் நியமிக்கப்படுகின்றன.
சென்னை 4-ம் மண்டலத்துக்கான குழுவில், டிட்கோ செயல் இயக்குனர் கே.பி.கார்த்திகேயன், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு மல்லிகா, அண்ணா மேலாண்மை நிறுவன டி.ஆர்.ஓ. செந்தில்குமார், உணவு பாதுகாப்பு துணை இயக்குனர் செந்தில்,
5-ம் மண்டலத்துக்கான குழுவில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார், சிலை தடுப்பு சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டு ராஜேஸ்வரி, கலால்வரி துணை ஆணையர் சங்கீதா, டான்சாக்ஸ் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல்,
6-ம் மண்டலத்துக்கான குழுவில் டி.என்.ஆர்.எஸ்.பி. திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு விஜயகுமார், டி.என்.ஆர்.டி. திட்ட துணை தலைமை செயல் அலுவலர் அருணா, வி.பி.டி.சி. இணை இயக்குனர் கிருஷ்ணராஜ்,
8-ம் மண்டலத்திற்கான குழுவில், நகரம் மற்றும் ஊரக அமைப்பு இயக்குனர் சந்திர சேகர் சகாமுரி, போதைத் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டு கலைச்செல்வன், டி.என்.டி.பி.ஓ. மேலாண்மை இயக்குனர் சுப்புலட்சுமி, ஆரம்ப சுகாதார மைய இணை இயக்குனர் தேவபார்த்தசாரதி,
9-ம் மண்டலத்துக்கான குழுவில், டி.என்.எஸ்.சி.பி. இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.கோபால சுந்தரரராஜ், பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆதிமூலம், தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகி ஜெய்னுலாப்தீன், ஐ.வி.சி.இசட். இணை இயக்குனர் சேரன்,
10-ம் மண்டலத்துக்கான குழுவில், டான்ஜெட்கோ இணை மேலாண் இயக்குனர் எஸ்.விநீத், சி.ஐ.யு. துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், சி.எம்.ஆர்.எல். சட்டப்பிரிவு அலுவலர் தர்பகராஜ், ஐ.எம்.எம். இணை இயக்குனர் சேகர்,
1,2,3-ம் மண்டலங்களுக்கான குழுவில், சமக்ரா சிக்ஷா மாநில கூடுதல் திட்ட இயக்குனர் என்.வெங்கடேஷ், சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ஆரோக்கிய ரவீந்திரன், டாஸ்கோ பொது மேலாளர் விஜயா, சி.எம்.ஏ. துணை இயக்குனர் சங்கீதா,
7,11, 12-ம் மண்டலங்களுக்கான குழுவில், பிப்ரேநெட் மேலாண் இயக்குனர் டி.ரவிச்சந்திரன், போதைத் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு துணை சூப்பிரண்டு ரியாசுதீன், அருண் சத்யா டி.ஆர்.ஓ., ஐ.சி.டி.எஸ். துணை இயக்குனர் செந்தில்குமார்,
13, 14 மற்றும் 15-ம் மண்டலங்களுக்கான குழுவில், பெண்கள் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா, சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு கனகராஜ், சிறப்பு டி.ஆர்.ஓ. அரவிந்தன், என்.இ.பி. இணை இயக்குனர் ஜெரார்டு மரிய செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.