ஜோதிகா சொன்ன ஆஸ்பத்திரியில் 10 பாம்புகள் பிடிபட்டுள்ளன………
கர்ப்பிணி பெண்கள் அந்த பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடி உள்ளனர்……
ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் பெண் ஊழியர் செல்வியையும் இந்த விஷப் பாம்புகளில் ஒன்று கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
சமீபத்தில் ஜோதிகா பேசும்போது, “தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி முறையாக பராமரிக்கப்படவில்லை……
அதன் பராமரிப்பு ரொம்ப மோசமாக உள்ளது..
அதனை என்னால் விவரித்து சொல்லக்கூட முடியவில்லை..
ஸ்கூல்கள், ஆஸ்பத்திரிகளையும் கோயில்கள் போலவே உயர்வாக கருத வேண்டும்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.ஜோதிகா…
இப்படி பேசியது ஒருசிலரால் மாபெருங் குற்றமாக பார்க்கப்பட்டது..
சர்ச்சையாக்கப்பட்டது……
தனிப்பட்ட வார்த்தை தாக்குதல்கள் ஜோதிகா மீது வீசப்பட்டன.. சுகாதார குறைபாடு, ஆன்மீக பிரச்சனையாக திரித்து கூறப்பட்டன!!
இந்நிலையில் ஜோதிகா சுட்டிக்காட்டிய அந்த தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் செல்வி என்பவரையும் பாம்பு கடித்துள்ளது……
வேலை முடித்துவிட்டு, ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குவார்ட்டஸுக்கு இவர் சென்று கொண்டிருந்தபோது, பாம்பு தீண்டியுள்ளது….
இதையடுத்து அந்த பெண் ஊழியருக்கு உடனடியாக சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின்பேரில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புதர்கள், மண்டிகளை ஜேசிபி மிஷின் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது…….
மற்றொரு புறம், வனவிலங்கு ஆர்வலர்கள் கொண்டு பாம்புகளை பிடிக்கும் பணியும் நடந்தது……
இதில், மொத்தம் 10 பாம்புகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளன..
இதில் 5 பாம்புகள் பயங்கரமான விஷத்தன்மை கொடியவை..
ஐந்து கட்டுவிரியன் பாம்புகளும் பிடிபட்டுள்ளன.
ஆஸ்பத்திரியை சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால்தான் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது..
இதனால், ஊழியர்கள் மட்டுமன்றி கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்பத்திரிக்கு தினமும் வந்து போகும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனராம்.
இது ஒரு பழமையான மருத்துவமனை என்பதால் பயன்படுத்தப்படாத கட்டிங்களும் அங்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.
பகல் நேரத்திலும் பாம்புகள் அலைகிறதாம்.. இதை பார்த்து சில கர்ப்பிணி பெண்கள் அலறியதாகவும் கூறுகிறார்கள்.
எனினும் சரியான நேரத்தில் கலெக்டர் கோவிந்தராவ் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததற்கு அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன