இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா பேரிழப்பை சந்தித்துள்ளது – ஒபாமா கடும் விமர்சனம்

Spread the love

இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத டிரம்ப் அரசால் அமெரிக்கா பேரிழப்பை சந்தித்துள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வாஷிங்டன்,

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றிரவு 9 மணிவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 224 ஆக இருந்தது. இதேபோன்று உலக அளவிலான பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது. அமெரிக்கா மற்ற நாடுகளை விட அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரத்து 542 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 47 ஆயிரமாக உள்ளது. அதிபரின் வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு ஆயிரத்து 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் தங்கள் வேலையை இழந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பின் குழப்பமான முடிவுகளை தற்போதைய மோசமான நிலைக்கு காரணம் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார்.

இது குறித்து சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா இன்று பேரிழப்பை சந்தித்துள்ளது. சுயநலவாதியாகவும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் தற்போது அமெரிக்கா பாதிப்படைந்து உள்ளது. உலக நாடுகள் அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கின்றன என்பதை மறந்து ஒரு அரசு செயல்படுகிறது. இந்த நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றது என நினைக்கிறேன். அதனால் ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட போகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கொரோனா விவகாரம் அமெரிக்க தேர்தலில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page