வெளிமாநிலத்தினர் வருகையால் கரூரில் அதிகரிக்கும் கொரோனா

Spread the love

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலத்தினர் வருகையால் கரூரில் அதிகரிக்கும் கொரோனா

கரூர்:

கரூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிக்கு திரும்பிய பெண் உள்பட 7 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர்கள் 7 பேரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 7 பேர் உள்பட மொத்தம் 37 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 353 ஆக இருந்தது. இதில் 345 பேர் கோயம்பேடு காய்கனி சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் ஆவர்.

இந்நிலையில் நேற்று இரவு வெளியிட்ட பரிசோதனை முடிவுகளின்படி அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 355 ஆகியுள்ளது.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் குணமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவரவர் வீடுக ளுக்கு அனுப்பி வைக்கப்ப டுகின்றனர்.

அதன்படி குணமடைந்த திருச்சியை சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் நேற்று வீடு திரும்பினர். விடுப்பு சான்றுகளை மருத்துவமனை டீன் வனிதா வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தற்போது திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 19 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page