பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் – தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

Spread the love

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை. வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம்.

வெளியூரில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும். மாணவர் விடுதிகளை ஜூன் 11ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் தேர்வுப்பணிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page