இராணுவ வீரர் பழனி அவர்களின் மனைவிக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் S.A . சுபாஷ் பண்ணையார் கோரிக்கை

Spread the love

இராணுவ வீரர் பழனி அவர்களின் மனைவிக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் S.A . சுபாஷ் பண்ணையார் கோரிக்கை

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து நாடார் மகன் இராணுவ வீரர்  துணை ஹவில்தாரான  பழனி  22 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றி வந்தவர்

இந்நிலையில் சீனா இராணுவத்திற்கும் இந்தியா இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த திரு பழனி அவர்களுக்கு பனங்காட்டு மக்கள் கழகம் சார்பாக வீர வணக்கம் செலுத்துகிறோம் …
நம் தாய் நாட்டிற்காக தன் உயிரை கொடுத்த பழனி அவர்களின் குடும்பத்திற்கு மத்திய- மாநில அரசுகள் அவரது வீர மரணத்தை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும். எம்.காம் பட்டதாரியான பழனி அவர்களின் மனைவிக்கு ஆசிரியர் பணி வழங்கவும், அவரது  குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். என்று பனங்காட்டு மக்கள் கழக தலைவர் S.A . சுபாஷ் பண்ணையார் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page