போலீஸ் கொலைவெறி தாக்குதல் உயிரிழந்த தந்தை மகன் இருவருக்கும் தலா ஐந்து கோடி வழங்கவேண்டும் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அரசு வேலை வேண்டும் சாதி துவேசத்துடன் தாக்குதல் நடத்திய போலீஸ்அதிகாரிகள் மீது சி.ஙி.மி விசாரணவேண்டும் பனங்காட்டு மக்கள் கழக தலைவர் S.A.சுபாஷ் பண்ணையார் முதலமைச்சருக்கு கோரிக்கை
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில், மொபைல் கடை மூலம் தொழில் செய்யும் இளைஞர்.பென்னிக்ஸ் கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து, காவல்நிலையத்துக்கு கொண்டுசென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்
மலத்துவாரத்தில் கம்பை கொண்டு தாக்கியதால், இரத்த போக்கு நிக்காமல் இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீசாரின் இந்த கொடூர தாக்குதலில் பென்னிக்ஸ் அவர் தந்தை ஜெயராஜ் இருவரும் உயிரிழந்துள்ளனர் ஜாதி வெறியோடு இந்த கொடும் செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனே பணிநீக்கம் செய்து கொலை குற்றம் பதிவுசெய்து உரிய தண்டனை வழங்கவேண்டும்
போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் பாதிக்கபட்டஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகன் இருவருக்கும் தலா ஐந்து கோடிரூபாய் வழங்கவேண்டும் பாதிக்கபட்ட குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நாடார் சமுதாயத்தனர் மீது சாதி துவேசத்துடன் சில போலீஸ் அதிகாரிகள் பி சி ஆர் வழக்கு பதிவு செய்வது பொய்வழக்குகள் பதிவு செய்து நாடார் இளைஞர்களின் உடல் உறுப்புகளை ஊனமாக்குவது போன்ற கொடும் பாதக செயலை செய்து வருகிறார்கள் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பனங்காட்டு மக்கள் கழக தலைவர் S.A.சுபாஷ் பண்ணையார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்